News

மார்ச் மாதத்தில் வருகிறார்கள் பவானியும் – யமுனாவும்

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டின் தொடக்கமே வெற்றியோடு ஆரம்பமானது இவர் அஜித்ததுடன் இணைந்து நடித்த விஸ்வாசம் நல்ல வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஐரா படமும் அடுத்த மாதம் வெளியாகும் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக நேற்று மாலை அறிவித்தது.

இந்த நிலையில் ஐரா படத்திற்கு தணிக்கை குழு அதிகாரிகள் யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளார். படத்தில் கொலை ரத்தம் போன்ற காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்திற்கு தணிக்கை கிடைத்து விட்ட நிலையில் புரோமோஷன் வேலைகளை அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த படம் நயன்தாராவுக்கு 63 படம் சினிமாவிற்கு நடிக்க வந்து கிட்ட தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தில் நயன்தாரா அவர்கள் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதுவம் குறிப்பாக அந்த கருப்பு நிறத்தில் வரும் நயன்தாராவின் கதாப்பாத்திரம் வேற ஒரு பரிமாணத்தில் நயன்தாராவை காட்டும் என்று படத்தின் இயக்குநர் சர்ஜூன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இவர் இதற்கு முன்பு ‘இது மனிதர்கள் நடமாடும் இடம் ‘ என்ற படத்தையும் லட்சுமி,மா போன்ற மிக அருமையான குறும்படங்கள் மூலம் மிக பிரபலமானவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்திற்கு பிரியங்கா ரவீந்திரன் கதை திரைக்கதை எழுதி உள்ளார் இவரும் லட்சுமி குடுப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version