News

மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை, திரையரங்களில் தான் வெளிவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி !

Published

on

கோவை மாவட்ட விஜய் ரசிகர் இயக்கம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கத்தி, மாஸ்டர் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதில் ஆசீர்வாதம் அமைப்பிலிருக்கும் மாற்று திறனாளிகளுக்கு 3சக்கர வாகனம், பள்ளி மாணவ மாணவிகளுக்கி விலையில்லா நோட்டு புத்தகங்கள் மற்றும் முககவசம், ஏழை பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கணகராஜ் கொரனா காரணமாக திரையரங்குகள் மூடல் காரணமாக ஓடிடியில் திரைப்படம் வெளியாகி வரும் நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை,திரையரங்களில் தான் வெளிவரும் என தெரிவித்தார். திரையரங்குள் திறந்த பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என தெரிவித்தவர் கோவிட்டினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ளவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

திரையரங்குகளை திறக்கவில்லை எனில் பலரும் கஷ்டப்படுவார்கள் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Trending

Exit mobile version