News

மாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் வெளியானது !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர் இதில் விஜய் போலீஸ் அதிகாரியாகவும் கல்லூரி போராசிரியராகவும் நடித்துள்ளார். ற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என்றும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த ஞாயிறு அன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை குறித்து தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது அதாவது விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கும் அந்த கதாப்பாதிரத்தின் பெயர் ‘ஜான் துரைராஜ்’என்று தெரியவந்துள்ளது. அதேபோல விஜய்க்கு வில்லனாக வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் கதாப்பாத்திரத்தின் பெயர் பவானி என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version