News

மிரட்டும் பேட்ட படத்தின் டீசர் மிரட்டும் ரஜினி

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது “பேட்ட” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அண்மையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது அப்போது பேசிய ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நான் இருக்கமாட்டேன் ஆதலால் யாரும் அங்கு வரவேண்டாம் என அறிவுறுத்தினார்.

இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் பேட்ட. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது.

படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் மற்றும் தீம் இசை 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

Trending

Exit mobile version