Connect with us
 

News

மிஷ்கினின் பிசாசு 2 திரைப்படத்தில் இணையும் மக்கள் செல்வன் !

Published

on

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி சுமார் 10 மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்படதிலும் நடிக்கவுள்ளாராம்.

பிசாசு 2 படத்திற்காக 5 நாட்கள் மட்டுமே கால்சீட் கொடுத்துள்ளாராம் மக்கள்செல்வன் அவர்கள். சிறப்பு தோற்றமாக இருந்தாலும் படத்தில் மிகவும் முக்கியமான வேடமாம் கதையின் திருப்புமுனைக்கு உதவும் ஒரு கதாப்பாத்திரம் என்பதால் அதில் நடிக்க ஒப்புக்கொண்டுடதாக விஜய்சேதுபதி தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

இயக்குநர் மிஷ்கின் மீது விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பால் அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.