News

மீண்டும் ஒரு முறை இணையும் லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் !

Published

on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகயுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த 13-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் கலவையான விமர்சனத்தையே சொல்கிறார்கள்.

முதல் பாதி செம்மையாக இருப்பதாகவும் படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பல மாதங்கள் கிடப்பில் இருந்தாலும் கொரோனா காரணமாக 50 தவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருத்தாலும் மாஸ்டர் படத்தால் அதன் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இவர்களுக்கு உதவும் வகையில் அந்த தயாரிப்பாளருக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடித்துத்தர விஜய் முடிவு செய்துள்ளாராம்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் அடுத்த படத்தை நடிக்கவிருக்கும் விஜய் இதன் பின்னர் இந்த படம் ஆரம்பிக்கப்படலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Trending

Exit mobile version