News

முடிவுக்கு வந்தது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கே.ஜே.ஆர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த படம் டாக்டர் கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்று இப்படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடந்தது இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

இதில் இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ‘டாக்டர்’ படத்தை அடுத்து நெல்சன் தளபதி நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார். தளபதி 65 படத்தின் ஆரம்ப்பக்கட்ட பணிகளை மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக ‘தளபதி 65’ படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தற்போதைய கனவு கண்னி நாயகி ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிகமான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version