Connect with us
 

News

முதல் முறையாக மொட்டை ராஜேந்திரன் இரட்டை வேடங்களில் நடிக்கும் டைம் அப் !

Published

on


குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான, குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாலியான அனுபவத்தை தரக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது ‘டைம் அப்.’

எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் மனு பார்த்திபன். நடிகராகவும் இயக்குநராகவும் இவருக்கு இது முதல் படம்!

கதாநாயகியாக மோனிகா சின்ன கொட்லா நடிக்க, மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர், சூப்பர் குட் சுப்ரமணி, ‘ஆதித்யா’ கதிர், ‘பிஜிலி’ ரமேஷ் என காமெடிக்கு கேரண்டி தரக்கூடிய பலரும் நடித்திருக்கிறார்கள்.

படம் குறித்து மனு பார்த்திபன் கூறுகையில், ”பேண்டஸி காமெடி ஜானர்ல ரசிகர்கள் ஜாலியா சிரிச்சு ரசிக்கிற மாதிரியான படமா உருவாக்கியிருக்கோம். படத்தோட ஹீரோ தீவிர கமல் ரசிகன். அவன் ஒரு சாமியாரை பகைச்சுக்கிறான். அது தெய்வகுத்தமாகி 30 நாள்ல அவன் இறந்துடுவான்ங்கிற சூழ்நிலை. அந்த சூழ்நிலையிலேருந்து, அதாவது எமன்கிட்டேயிருந்து எப்படி தப்பிக்கிறான்கிறதுதான் கதை.

முதன்முறையா ‘மொட்டை’ ராஜேந்திரன் டபுள் ஆக்ஷன்ல நடிச்சிருக்கார். ஹீரோ மாதிரியும், வில்லன் மாதிரியும் வருவார். அவரு மாடர்ன் எமனா வந்து பண்ற கலாட்டாவெல்லாம் ரகளையா இருக்கும். இன்னொரு கெட்டப்புலயும் மனுஷன் அட்ராசிடி பண்ணிருக்கார். குழந்தைகள் செமையா ரசிப்பாங்க” என்றார்.

படம் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது.

Continue Reading