Connect with us
 

News

முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் இருக்கிறது – சூர்யா !

Published

on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம்.

தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழகத்தில் உரிமையை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.