News
மெர்சல் டீசர் – விமர்சனம்
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று 21ஆம் தேதி அட்லியின் பிறந்த நாளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன்னர் மெர்சல் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
இந்த படம் ரூ.130 கோடி செலவில் தயாராகி உள்ளது. விஜய் படங்களில் அதிக செலவில் உருவாகும் படம் இதுதான். விஜய் ரசிகர்கள் மடடுமல்லாது அனைத்து தரப்பினருமே மெர்சல் டீசரை எதிர்பார்த்து காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதை மூன்று கால கட்டங்களில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. விஜய் மேஜிக் நிபுணர், பஞ்சாயத்து தலைவர், டாக்டர் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம்பெற்று உள்ளன. விஜய், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்து இருக்கிறார்.
விஜய் காளையுடன் இருப்பது போன்ற படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தற்போது படத்தின் டீஸரும் வெளியாகி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் ரசிகர்கள். தீபாவளி பண்டிகைக்கு மெர்சல் படத்தின் மிரட்டலை காணலாம் .