News
ரசிகர்களுக்கு விஜய் அதிரடி அறிக்கை

சமீபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய் சுறா படத்தாய் பற்றி எதிர்மறையான கருத்துகளை கூறியதற்காக அவரை விஜய் ரசிகர்கள் ஆபாசமாக எழுதி இணையத்தில் வெளியிட்டனர்.
சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.
யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு.
எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.
அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.