Connect with us
 

News

ரஜினியின் தர்பார் தமிழகத்தில் மட்டுமே ரூ.75 கோடி அடிதடி வசூல்

Published

on

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஜனவரி 9ம் தேதி வெளியான தர்பார் படத்திற்க்கு கலவை விமர்சனம் கிடைத்து வருகிறது. என்ன இருந்தாலும் நீண்ட பொங்கல் தின விடுமுறை காரணமாக படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது.

படம் வெளியாகி மூன்று தினங்களில் 150 கோடி ரூபாய் வசூலையும் ஒரு வாரத்தில் 220 கோடி ரூபாய் வசூலை கொடுத்ததாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்தது.

இந்த நிலையில் தர்பார் படத்தின் தமிழக இருமையை ரூ.63 கோடிக்கு விலைபோனது தற்போது கிடைத்த தகவலின் படி ரூ.75 கோடி இந்த படம் வசூல் செய்துள்ளதாகவும் சென்னையில் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாதம் முழுவதும் பெரிய படங்கம் எதும் வெளியாகது என்பதால் இன்று வரை தர்பார் படம் பல பெரிய திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடி வசூலை ’தர்பார்’ படம் நெருங்கும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறி வருகின்றன.