News

10 நாட்கள் சென்னையில் நடக்கும் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு !

Published

on

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில்தான் ரஜினி அவர்களுக்க் உடல்நிலை பிரச்சனை ஏற்பட படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ரஜினிகாந்த் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக சில நாட்களாக தகவல்கள் வெளியானது. மார்ச் 15 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து அடுத்த அப்டேட்டாக அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக ஐதராபாத்தில் நடக்கவிருந்த படப்பிடிப்புத்தான் தற்போது சென்னையில் நடக்கவுள்ளதாம்.

Trending

Exit mobile version