News

ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் உதவி செய்த விஜய் ரசிகர்கள் !

Published

on

தளபதி விஜய் பிறந்தநாள் ஜூன் 22-ம் அதாவது நாளை கொண்டாடப் படவிருக்கிறது. அதனை ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவும் நிலையில் ரசிகர்கள் எல்லாரும் கொண்டாட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள்,செய்திதாள் வாழ்த்துக்கள் ஆகியவற்றை அளிப்பதைப் தவிர்த்து பத்திரமாக இருக்க வேண்டும் எனத் ரசிகர்மன்ற நிர்வாகி மூலமாக அனைத்து மன்றங்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒரு சிறப்பான நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். லடாக் எல்லையில் சீன ராணுவத்தோடு நடந்த சண்டையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்பவர் வீர மரணம் அடைந்தார்.

அவரது குடுப்பத்துக்கு உதவும் விதமாக விஜய் ரசிகர்கள் ஒரு லடம் ரூபாய் அனுப்பியுள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்கு பாராட்டு கிடைத்து வருகிறது.

Trending

Exit mobile version