News

ரூ.160 கடன் வாங்கி வீட்டுக்கு தெரியாமல் சென்னைக்கு வந்தேன் -ரஜினி காந்த்

Published

on

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் , கோலிவுட் பிரபலங்கள் , ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விட பெரிய ரசிகன் நான். நிலாவை பார்த்து சாப்பிட்ட நாம் நிலவில் இறங்கினால் எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ அதுபோன்ற ஒரு மகிழ்ச்சி இப்போது இருக்கிறது. எம்.ஜி.ஆர்- க்கு பிறகு ரஜினி தான் தெலுங்கு, இந்தி என அனைத்திலும் உடல் மொழியாலும் உச்சரிப்பாலும் சாதித்தவர்”

ஆனால், ரஜினிகாந்தின் சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது. ஹிந்தி தமிழ் என அனைத்து நடிகர்களிடமும் இருக்கும் என கூறி ரஜினியின் திரையுல பயணத்தையும் அவரது திறமையையும் வியந்து பாராட்டியுள்ளார்.

இதையடுத்து பேசிய இசையமைப்பாளர் அனிருத், கூறியுள்ளதாவது :

அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்தான் என தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் பலத்த கை தட்டினார்கள்.

அதன்பின், மேடையேறிய ரஜினி கூறியதாவது :

என் அண்ணன் சத்திய நாராயணராவ் கடன் வாங்கி தேர்வு கட்டணம் செலுத்தினார்.ஆனால், நான் தேர்வு எழுதினால் தேர்ச்சி அடைய மாட்டேன் என வீட்டுக்குத் தெரியாமல் தமிழ்நாட்டுக்கு ரயில் ஏறி வந்தேன் என்று தெரிவித்தார்.

Trending

Exit mobile version