Connect with us
 

News

லண்டனில் டப்பிங் பேசும் நடிகர் தனுஷ்

Published

on

வட சென்னை படத்திற்கு பின்னர் வெற்றிமாறன் – தனுஷ் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையில் வேல்ராஜ் அவர்களின் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாக்கி அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் படம்தான் அசுரன் இதில் தனுஷ் அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார் ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

அடுத்த மாதம் 4ம் தேதி படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளனர்.தற்போது தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து முடிந்து விட்ட நிலையில். தற்போது தனுஷ் டப்பிங் பேசி முடிக்கவில்லை இதனால் படக்குழு காத்திருக்கிறது. ஆனால் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கான படப்பிடிப்புக்க்காக லண்டனில் உள்ளார்.

இதனால் தனுஷ் தனது டப்பிங் பணிகளை லண்டனில் மேற்க் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.