Connect with us
 

News

பிரபல வம்சி படிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் !

Published

on

தமிழ் சினிமாவில் வசூல் நடிகராக வலம் வரும்வருபவர் தளபதி விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்தாண்டு பொங்களுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்யாவில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் பூஜ ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று வந்ததால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவு வருகிறது. சமீபத்தில் இயக்குனர் வம்சி சென்னையில் விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும் இக்கதை விஜய்க்கு மிகவும் பிடித்ததாகவும் முழு கதையையும் தயார் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது.

தமிழில் வெளியான தோழா படத்தை வம்சி இயக்கிவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading