News

வலிமை படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் பிப்ரவரி 15 தேதி முடிவடைகிறது !

Published

on

தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி பிப்ரவரி 15 தேதிக்குள் வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைகிறது இதை இப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் செதிவித்துள்ளார்.

இந்த வருடம் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் படம்தான் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இதற்க்கு முன்னர் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர்.தற்போது வலிமை படதை இயக்கி வருகிறார். இந்த படத்தை மறந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஆனால் படம் ஆரம்பித்து சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்று வரையில் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் வெளியிடாமல் இருந்து வருகிறது படக்குழு.

இந்நிலையில் இப்படத்தை பற்று முதல் முறையாக வாய் திறந்துள்ளார் போனி கபூர் போர்ப்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் வலிமை திரைப்படம் குறித்த கேள்வி கேட்க பட்டது அதற்கு பதில் கூறிய போனி கபூர் பிரவரி 15 தேதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து விடும். இன்னும் ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டுமே படம்பிடிக்க வேண்டியுள்ளது. அதன் பின்னர் பின் தயாரிப்பு பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம்.

படத்தின் வெளியீட்டு தேதியை மிகவும் விரைவில் அறிவிப்போம் என்றும் கூறினார். இதை கேட்ட அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Trending

Exit mobile version