News

வலிமை படத்தின் தலயின் ஓப்பனிங் பாடலை கேட்டு விட்டேன் பிரபல இசையமைப்பாளர் டுவிட் !

Published

on

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின்னர் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடிக்கும் திரைப்படம் வலிமை. மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஈஸ்வரமூர்த்தி ஐபிஸ் என்ற காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விரைவில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர்கள் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளாது. அதேபோலவே இசையமைப்பாளர் யுவனும் அஜித்தின் ஓப்பனிங் பாடலை முடித்துவிட்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதுயிருக்கும் அந்த பாடல் ஒரு குத்துப் பாடலாக அமைந்திருக்கிறது. இந்த பாடலை ஒடிசாவிலிருந்து ட்ரம்ஸ் கலைனஞர்களை வரவழைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளாராம் யுவன் அதன் புகைப்படங்களுக்கும் சற்று நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் பதில் கூறியுள்ளார். அதில் யுவன் இசையமைத்துள்ள வலிமை படத்தின் அஜித் அவர்களின் ஓப்பனிங் பாடலை கேட்டதாகவும் வலிமை படத்தின் அப்டேட் வரவரைக்கும் காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தரமான பாடலாக இருக்கும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version