News

வலிமை படத்தில் நடிக்கவில்லை ஆனால் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஆசை

Published

on

நடிகர் பிரசன்னா நடிகை ஸ்னேகாவின் கணவன் இப்படி சொல்லிதான் இவரை அறிமுகம் செய்ய வேண்டும் என்று சொல்லும் நடிகர் அல்ல இவர். ஆரம்ப காலகட்டத்தில் சுமாரான படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் அஞ்சாதே என்ற படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நமக்கு அறிமுகம் ஆனார். பிரசன்னாவிற்க்கு இப்படியும் மிரட்டல் நடிப்பு தெரியும் என்று நம் அனைவருக்கும் காட்டியவர். அதன் பிறகு ஒரு சில அவருக்கு மனதுக்கு பிடித்த படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

தற்போது இவர்தான் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் வில்லன் என்ற ஒரு தகவல் கடந்த மூன்று தினங்களாக சமூக வலைதளங்களில் வலம் வந்து இருக்கிறது. இந்த தகவலை அறிந்த நடிகர் பிரசன்னா கூறியது வலிமை படத்தில் நடிக்க என்னிடம் பேசினார்கள் ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு அமையாமல் போய்விட்டது ஆனால் எதிர் வரும் காலத்தில் கண்டிப்பாக அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையும் என்று கூறினார்.

Trending

Exit mobile version