News

சொன்ன தேதியில் வலிமை பர்ட்ஸ் லுக் வெளியாகது படக்குழு அறிவிப்பு !

Published

on


அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளது.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1-ஆம் தேதி அஜித் குமார் அவர்களின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனந்த்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் பர்ட்ஸ் லுக் வெளியுடுவதாக இருந்தோம்.

அந்த அறிவிப்பு வெளிவரும் போது கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து உற்றார் உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியில் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருன்க்கின்றனர்.

இத்தைகைய அசாதாரண சூழ் நிலையில் ஜீ ஸ்டுடியோஸ் பே வியூ ப்ர்ரொஜெக்ட்ஸ் இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழி நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி வலிமை படத்தின் பர்ட்ஸ் லுக் வெளியீடு மற்றும் ஒரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

Trending

Exit mobile version