Connect with us
 

News

வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா?

Published

on

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’ வரும் அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அப்படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க தன்னை தயார் படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவிற்க்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ‘சூரரை போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அப்செட்டில் உள்ளனர்.

இப்படியிருக்கும் நிளையில் ஆண்ட்ரியாதான் சூர்யாவிற்க்கு ‘வாடிவாசல்’ பட நாயகி என்ற தகவல் சூர்யா ரசிகர்களுக்கு மேலும் சோர்வடைய வைத்துள்ள்ளதாம். ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கலாம் ஆனால் கதாநாயகியாக வேண்டாம் என சமூக வலைதளங்கள் மூலம் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் நடிகை ஆண்ட்ரியா ஒரு அற்புதமான நடிகை தனக்கு கொடுக்கும் வேடங்களை மிக நேர்த்தியாக நடிக்க கூடிய நடிகை தன் நடிப்புக்கு சவாலான வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் ஒரு சிறந்த நடிகை என்பதை ரசிகர்களை எப்போதுதான் புரிந்து கொள்ளபோகிறார்கள் என்று தெரியவில்லை.