News

வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் நடனமாடி முடித்தபோது படப்பிடிப்பு குழுவினர் கைத்தட்டி விசிலடித்தோம் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய்சேதுபதி,மாளவிகா மோகனன் நடித்திருக்கும் படம்தான் ‘மாஸ்டர்’. விஜய்யின் தீவிர ரசிககரான சாந்தனு பாக்யராஜ் முதல்முறையாக இதில் முக்கியமான கேரக்டரில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் படத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் நிறையவே இருக்கிறது. எனவே வழக்கமான விஜய் அண்ணாவை திரையில் பார்க்க முடியாது.

அவர் தன்னைத்தானே மாற்றிக்கொண்டு நடித்தை படப்பிடிப்பில் பார்த்து ஆச்சரியப்பட்டேன். விஜய் என்றால் இப்பிடிதான் நடிப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெவ்வேறு மாதிரி நடித்தார். கண்டிப்பாக இது விஜய் படமாக இருக்க வேண்டும் ஆனால் வழக்கமான விஜய் படமாக இருக்ககூடாது என்பதில் இயக்குநர் மிக தெளிவாக இருந்தார்.

அப்படி வித்தியாசம் காட்டினால்தான் மக்களிடையே படம் ரீச் ஆகும் என்று அவர் நினைத்தார். டெல்லி படப்பிடிப்புக்கு நான் சென்றபோது ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ஒரு முறை விஜய் நடனமாடி முடித்தபோது படப்பிடிப்பு குழுவினர் கைத்தட்டி விசிலடித்தோம். காரணம் அந்தப் பாடல் காட்சியில் அவர் வெளிப்படுத்திய நடன அசைவுகள் மற்றும் அணுகுமுறை ஸ்டைல் எல்லாமே வேறு மாதிரி இருந்தது.

Trending

Exit mobile version