News

விக்ரமின் ‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் அறிமுகமான ரெஜித் மேனன்

Published

on


உள்ளடக்கத்தில் உரத்த குரலில் கதைகளை பேசும் சில சிறிய படங்களின் வருகை, பார்வையாளர்களை கவர்ந்திழுத்து, ரசிகர்களை தன்பக்கம் கொண்டுவந்து அவர்களால் முன்னுரிமை பெறுகிறது.

“எம்பிரான்”

“எம்பிரான்” படம் மிகபெரிய அளவில் ஆர்வத்தை வெளிபடுத்திய ஒரு திரைப்படமாகும். முற்றிலும் வேறுபட்ட சூழலில் இருந்து வரும் இருவரின் இடையே வரும் காதல்- நகைச்சுவைப் படம். திரைக்கதை முற்றிலும் மாறுபட்டவை, வசனங்களை காட்டிலும் காட்சிகளின் மூலமே கதையை கொண்டு செல்கிறோம். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி காதலை சேர்த்து வைப்பது போல கதை அமைந்துள்ளது. ஜெயா மற்றும் பிரியனின் கதாபாத்திரங்களில் ராதிகா பிரீத்தி மற்றும் ரெஜித் மேனன் நன்றாக நடித்துள்ளனர். கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ள ராதிகா ப்ரீத்தி இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். விக்ரமின் ‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் அறிமுகமான ரெஜித் மேனன் இந்த படத்தில் முன்னனி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சந்திர மௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் மற்றும் வள்ளியப்பா நடித்துள்ளனர்” என்று இயக்குநர் கிருஷ்ண பாண்டி கூறுகிறார்.

இந்த திரைப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. “யாகாவராயினும் நாகாக்க” படத்தின் புகழ் பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிண்ணனி இசை இந்த படத்திற்கு உயிருட்டும் வகையில் அமைந்துள்ளது. கபிலன் வைரமுத்து இந்த படத்திற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். புகழேந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி. வி. பிரகாஷின் “புரூஸ் லீ” பட எடிட்டர் மனோஜ் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். இந்த மாதம் 22-ந் தேதி, “எம்பிரான்” திரைக்கு வருகிறது.

Trending

Exit mobile version