News

விக்ரம் பிரபு நிக்கிகல்ராணி பிந்துமாதவி நடிக்கும் பக்கா

Published

on

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “                                                                                                

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு           –  எஸ்.சரவணன் / இசை   –  C.சத்யா  / பாடல்கள்   –   யுகபாரதி, கபிலன் 

கலை   –  கதிர் /  நடனம்   –   கல்யாண்,  தினேஷ்

ஸ்டன்ட்   –  மிராக்கிள் மைகேல் / எடிட்டிங்    –  சசிகுமார்                                                                            

தயாரிப்பு நிர்வாகம் –  செந்தில்குமார்                                                                                   

இணை தயாரிப்பு  –  B.சரவணன்                                                                               

தயாரிப்பு  –  T.சிவகுமார்                                                                                                              

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  S.S.சூர்யா                                                            

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..                                                                                               

முழு நீள  காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம். ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம்.

இன்டீரியல்  காட்சிகள் ( சுவற்றிற்குள் )  இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப் பட்ட முதல் படம் இந்த பக்கா. 

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப் குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்ட சாங்கை கம்போஸ் பண்ணினோம். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக நிச்சயம் இருக்கும்.

குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஆற்று  திருவிழாவில்  ஒரு வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கினோம்.  படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா.

Trending

Exit mobile version