News

விஜய்க்காக தனது கொள்கையை மாற்றிக்கொண்ட லேடி சூப்பர் ஸ்டார்

Published

on


தமிழ் சினிமா உலகில் எந்த படத்தில் ஒரு நடிகை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டால் அந்த படத்தின் புரமோஷன் உள்பட அணைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் படக்குழுவின் ஒப்பந்தம். ஆனால் நடிகை நயன்தாரா இதற்க்கு எல்லாம் என்னால் வரமுடியாது என்று கூறிதான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுக் கொள்வாராம்.

நயன்தாராவின் சம்பளம் 5 கோடி ஒரு படத்திற்கு என்று கூறுகிறார்கள் இதில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரிவில்லை அப்பிடி சம்பளம் வாங்கியும் இவர் ஒரு படத்தின் புரமோஷன் விழாவிற்கும் வருவதில்லை குறிப்பாக இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த படம் மாயா,அறம் , ஐரா போன்ற படங்களுக்கு கூட இவர் புரமோஷன் விழாவிற்கு வரவில்லை என்பது கூடுதல் தகவல்.

தற்போது இவர் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் படம்தான் பிகில் இந்த படத்தின் இசை வெளியீடு வருகிற வியாழன் அன்று நடைபெறவிருக்கிறது.இந்த விழாவிற்கு வருவதாக நயன்தாரா ஒப்புதல் கொடுத்துள்ளார். அதுபோல முருகதாஸ் இயக்கத்தில் ரஜனியுடன் நடிக்கும் தர்பார் படத்திற்கும் அணைத்து புரமோஷன் விழாவிற்கும் வருவதாக கூறியுள்ளார்.

விஜய்,ரஜினி இருவருக்கும் மட்டும்தான் வருவதாகவும் புரமோஷன் வேலைகளுக்கு வரவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version