News
விஜய்யின் 65-வது படத்துக்கு ரஜினி பட தலைப்பா?

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் துப்பாக்கி,கத்தி,சர்கார், படங்களை தொடர்ந்து நான்காவது முறையாவது ஏ.ஆர்.முருகதாசுடன் மீண்டும் இணைகிறார். இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் என் படங்களுக்கு என்றுமே இரண்டாம் பாகம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இந்நிலையில் விஜய்க்கு இளைய தளபதி என்ற பட்டம் மாறி தற்போது தளபதி விஜய் என்று மாறியுள்ளது. இதையே நடிகர் விஜய்யின் 65-வது படத்திற்க்கு வைக்க இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முயற்சி செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ‘தலைவா’ படத்திற்கே ‘தளபதி’ என்ற பெயர் பரிசீலனை செய்யப்பட்டு கடைசி நேரத்தில் அந்த தலைப்பு கிடைக்காமல் போகவே தலைவா என்ற தலைப்பு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.