News

விஜய் – அஜித் ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த விவேக் !

Published

on

விஜய் – அஜித் ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் அடிக்கடி சண்டைபோட்டுக்கொள்வது மீம்ஸ் போட்டு கிண்டல் செய்வது என்பது பல வருட காலமாக நடந்து வருகின்ற ஒரு நிகழ்வு. சில சமயங்களில் காரணமே இல்லாமல் இரு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக்கொள்வதும் உண்டு.

ஒரு சில சமயங்களில் உலக அளவில் படு கேவலமான கேஸ்டேக்குகளை இவர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்பதும் உண்டு. அது பல ரசிகர்களையும் தாண்டி நடிகர் மற்றும் நடிகைகளையும் முகம் சுளிக்க வைக்கும். இப்படி நடக்கும் ரசிகர்கள் சண்டையில் என்னை யாரும் டாக் செய்ய வேண்டாம் என்று நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இது பற்று அவர் கூறும் போது நண்பர்கள் விஜய் – அஜீத் அல்லது எந்த ஒரு நடிகரையும் தனி நபரையும் தரம் தாழ்த்தி செய்யும் செயலை நான் ஒரு நாளும் விரும்புவதில்லை. இதற்க்காக என்னை டாக் செய்ய வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். இதையும் மீறு டாக் செய்தால் அவர்களை நான் பிளாக் செய்ய வேண்டிய நிலை வரும்.

Trending

Exit mobile version