News

விஜய் உலகின் மிகச்சிறந்த மேஜிக்மேன் – டேனி பெலவ்

Published

on

இளையதளபதி விஜய், ‘மெர்சல்’ படத்தில் மேஜிக்மேனாக நடித்து வருவது தெரிந்ததே. இந்த கேரக்டருக்காக உண்மையாக இரண்டு மாதங்கள் மேஜிக் பயிற்சி எடுத்து கொண்ட விஜய், காட்சியின்போது உண்மையாகவே மேஜிக் செய்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் விஜய்க்கு மேஜிக் சொல்லி கொடுத்த பயிற்சியாளர் டேனி பெலவ் என்பவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ‘ஒருவேளை விஜய் நடிப்பு தொழிலுக்கு பதிலாக மேஜிக் தொழிலை செய்தால் அவர்தான் உலகின் மிகச்சிறந்த மேஜிக்மேன்களில் ஒருவராக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் விஜய்யுடன் இணைந்து பணிபுரிவதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், ஒவ்வொரு காட்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து முழு ஈடுபாட்டுடன் விஜய் நடித்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
படத்தின் டீசர் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஏங்கி கொண்டுருக்கும் நிலையில் விரைவில் தேதி அறிவிப்பு வரும் என தயாரிப்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version