News

விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன்?

Published

on

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தை நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. இதற்காக பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவனை வில்லனாக நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதே சமயத்தில் பாலிவுச் முன்னணி நடிகரான ஜான் ஆபிரகாம் இப்படத்தில் விஜய்யுடன் வில்லனாக பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

இது பற்றி எந்தவொரு அதிகார்வபூர்வ தகவர்களும் வெளியாகவில்லை விரைவில் யார் வில்லன் என்ற தகவல் வெளியாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Trending

Exit mobile version