News

விஜய் சேதுபதி படத்தை பார்ப்பதற்கான கட்டணத்தை அறிவித்த ஜீ ப்ளக்ஸ் !

Published

on

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேல ராமமூர்த்தி, பவானி ஶ்ரீ மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் க/பெ.ரணசிங்கம். குணச்சித்திர நடிகரான பெரிய கருப்பத்தேவரின் மகன் பெ.விருமாண்டி இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குநகராக அறிமுகமாகிறார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது ஜிப்ரான் இப்படதுக்கு இசையமைத்துள்ளார். விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்னைகளை மையக்கருத்தாக கொண்டு இப்படம் உருவாயிருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது நாளை இப்படத்தின் மூன்றாவது பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தை ஜீ ப்ளக்ஸ்(Zee Plex) ஓடிடி நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உருமையைக் கைப்பற்றியுள்ளது.

திரையரங்குகள் போலவே காட்சிக்கு காட்சி கட்டணம் செலுத்திப் படம் பார்க்கும் முறையில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் க/பெ.ரணசிங்கம் அமைந்துள்ளது.

அக்டோபர் 2 – ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம் ஒருமுறை பார்க்க ரூ.199 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஓரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version