News

வசூல் மன்னன் என்று மீண்டும் நிரூபித்த தளபதி 10 நாட்களில் 200 கோடி வசூல் செய்த மாஸ்டர் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள். செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்த மாச்டர் திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் 50 சதவீதம் இருக்கைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி கொடுத்தது தமிழக அரசாங்கம். அப்படி திறக்கப்பட்டாலும் பெரிய படங்கள் எதும் வெளியாகதால் திரையரங்கே களையிழந்து காணப்பட்டது. அதற்க்கு உயிர் கொடுக்கும் விதமாக பொங்களுக்கு வெளியான படம்தான் மாஸ்டர்.

வெளியானது மட்டுமில்லாமல் வசூலையும் வாரி குவித்து வருகிறது அதன்படி 10 நாடிகளில் இப்படம் உலக அளவில் ரூபாய் 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பெரும் லாபத்தை கொடுத்துள்ளது இதனால் திரையுலகினர் பலருக்கு ஆச்சர்த்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்க்கு முன்னதாக விஜய் நடித்து வெளியான மெர்சல், சர்கார். பிகில் போன்ற திரைப்படங்களும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் தற்போது மாஸ்டர் படமும் அந்த சாதனையை புரிந்து உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் #MasterEnters200CrClum எனற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

எனக்கு 100 சதவீத இருக்கை வேண்டாம் 50 சதவீதம் கிடைத்தாலும் நான் ஒரு வசூல் மன்னந்தான் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் தளபதி விஜய்.

Trending

Exit mobile version