News

விஜய் – ரஜினி படங்களுக்கு இணையாக வெளியாகும் ஓவியாவின் 90ML

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் அனிதா உதுப் இயக்கத்தில் நடித்து பிப்ரவரி 22 வெளியாக இருக்கும் படம் 90ML. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து பல சர்ச்சை விமர்சனங்களை பெற்றது. ஓவியாவின் ஆர்மிகளே அலறும் அளவிற்கு படத்தில் இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் இருந்தது. அது ஒரு புறம் இருந்தாலும் இந்த வீடியோ இன்று வரையில் 5.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்தார் நடிகை ஓவியா. அதோடு இல்லாமல் ஒரு விஜய் அவர்களுக்கு எந்த ஒரு மாஸ் இருக்குமோ அதே அளவிற்கு இவருக்கு இருக்கிறது அது என்ன வென்றால் முதல் முறையாக அதிகாலை 5 மணி காட்சிகளும் திரையிட இருப்பதாகவும் ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகார்வப்பூர்வமாக அறிவித்தார்.

அதோடு மட்டும் அல்ல அந்த அதிகாதி 5 மணி காட்சியின் நான் உங்களை சந்திக்க திரையரங்கம் வருவேன் என்றும் ஒரு இன்ப அதிர்ச்சியை தெரிவித்தார் நடிகை ஓவியா.

இன்று வரையில் , ரஜினி,கமல்,விஜய்,அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு மட்டுமே அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிட்டு வந்த நிலையில் இந்த மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக ஓவியாவும் அவரின் படமும் திரையிட படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version