Connect with us
 

News

விஜய் – வெற்றிமாறன் கூட்டணி உண்மையா ?

Published

on

மெர்சல் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பின்னர் தற்போது விஜய் – முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முடித்த பின்னர் யார் இயக்கத்தில் விஜய் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

அந்த வரிசையில் மோகன்ராஜா பெயர் முதல் இடத்தில உள்ளது. இரண்டாவது இடத்தில அட்லீ மற்றும் வினோத் பெயர்கள் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெற்றிமாறன் மற்றும் விஜய் கூட்டணி அமைப்பதாக கூறப்பட்டது.

எங்களின் சினிடைம்ஸ் பக்கத்தில் கூட இது பற்றி செய்திகள் நாங்கள் பகிர்ந்து இருந்தோம். இது பற்றி விஜய் தரப்பில் கேட்ட போது விஜய் – வெற்றிமாறன் முன்பு சந்திக்கொண்டனர்.

ஆனால் சமீபத்தில் இருவரும் சந்தித்து கொள்ளவே இல்லை எனவே இந்த தகவல் முற்றும் பொய்யான ஒரு தகவல் என்று தெரிவித்தனர்.

Continue Reading