Connect with us
 

News

விஜய் 63 படத்தில் இணையும் சன் டி.வி நிறுவனம்

Published

on


தெறி,மெர்சல் படத்தின் வெற்றியை தொடந்து மூன்றாவது முறையாக தளபதி 63 படத்தில் இணைந்திருக்கிறார்கள். மிகவும் பிரமாண்டமான பொருள் செலவில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இரண்டாவது முறையாக நடிக்கிறார் இவர்களுடன் நடிகர் கதிர் , ஆனந்தராஜ்,ஜோகி பாபு,விவேக்,மற்றும் பலர் நடிக்கிறார்கள்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளில் என தயாராகி வருகிறது.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் விஜய் ஒரு பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்பெஷலாகவும் , மிகப் பிரமாண்டமாகவும் ஒரு பாடலை வைத்துள்ளார் அட்லீ. அந்தப் பாடலில், விஜய்யுடன் சேர்ந்து 1000 குழந்தைகள் நடனமாடினர். இது விஜய்யின் அறிமுகப் பாடலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான ஒரு தகவல் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டி.வி. கைப்பற்றியுள்ளது. சர்கார் படத்தை இதே சன் டி.டி.நிறுவனம்தான் தயாரித்தது அதன் உரிமமும் இவர்களிடம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தளபதி 63 படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழு.