News

விஜய் 63 படத்தில் பாடும் கப்பீஸ் பூவையர்

Published

on


சர்கார் படத்தின் வெற்றிக்கு பின்னர் மூன்றாவது முறையாக அட்லீ – விஜய் இணைந்திருக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவிருக்கிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். நடிகர் கதிர், விவேக்,யோகி பாபு , தீனா , ஆனந்த் பாபு மற்றும் டானியல் பாலாஜி என ஒரு நடிகர் கூட்டமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

இந்த படத்திற்கு இயைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான 7 வயது ஆனா குட்டி பாடகர் கப்பீஸ் பூவையர் இந்த படத்தில் நடிக்கிறார் அதோடு மட்டும் இல்லாமல் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் என்பது ஒரு கூடுதல் தகவல்.

Trending

Exit mobile version