News

விஜய்63 படத்தின் இயக்குனர் மோகன் ராஜா?

Published

on

மெர்சல் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பின்னர் தற்போது விஜய் துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஏ.ஆர் . முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

முந்தைய இரண்டு படங்களை போலவே இந்த படத்திலும் ஒரு முக்கியமான சமூக அக்கறை கொண்ட விஷயத்தை கொண்டே இந்த படத்தின் கதை நகரும்.

இந்நிலையில் தற்போது விஜய் அவர்களின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்பது ஒரு விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. தற்போது விஜய் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வேலாயுதம் படத்தின் மூலம் இணைந்த ஜெயம் ராஜா விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநர் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது தனி ஒருவன் படம் போல இருக்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version