News

வில்லனாக களமிறங்கும் இயக்குநர் கெளதம் மேனன் !

Published

on

இயக்குநர் ஜி மோகன் இயக்கிய திரெளபதி திரைப்படம் கடந்து வருடம் வெளியாகி பெரும் பரபரப்பை பெற்று நல்ல வெற்றியும் பெற்றது. இதனை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தின் பெயர் ருத்ரதாண்டவம் என்று அறிவித்தார்.

திரெளபதி படத்தின் ஹீரோ இப்படத்திலும் நாயகனாக நடிக்க குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நாயகியாக நடிக்க உள்ளார். மிக விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது. தற்போது இப்படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அதுவும் இப்படத்தில் இவர்தானாம் வில்லனாம் இதனை படக்குழு அதிகார்வபூர்வமாக அறிவித்தது.

இதற்கு முன்னர் கவுதம் மேனன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version