News

விவேகம் கதை என்னுடையது துரோகம் செய்துவிட்டனர்

Published

on

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விவேகம் படத்தின் கதை என்னுடையது என தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அஜித்திற்கு நெருங்கிய உதவியாளர் ஒருவரிடம் கதையை சொன்னேன். ஆனால் அறிமுக இயக்குனருடன் அவர் பணியாற்றமாட்டார் என கூறி அஜித்தை அவர் சந்திக்க அனுமதிக்கவில்லை.”

பின்னர் விவேகம் படம் பார்க்கும்போது என் கதையை 60 சதவீதத்திற்கும் மேல் பயன்படுத்தியுள்ளது தெரிந்தது. இந்த கதையை வைத்து I-நா என்ற படத்தை அடுத்த வருடம் எடுக்கவுள்ளேன்.”

நான் பணத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ இதை கேட்கவில்லை. என் கதை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் போதும்” என அவர் தன் முகநூல் பதிவில் அவர் கேட்டுள்ளார்.

இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று அஜித் தரப்பில் இருந்து வாய்திறந்தாள் மட்டுமே தெரிய வரும்.

Trending

Exit mobile version