News

மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் !

Published

on

நடிகர் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் வயது 59 தனது தனித்துவமான காமெடி மூலம் மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை காமெடி மூலம் கொண்டு சேர்த்தார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவர் தனது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். இன்று வரையில் பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விவேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓமந்தூரர் அரசு மருத்துமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டது.

எக்மோ கருவி பொருத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில் காலமானார் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது.

Trending

Exit mobile version