News

விஷால் நடிக்கும் 31-வது திரைப்படதின் இயக்குனர் யாரென்று இன்று வெளியானது !

Published

on

விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சக்ரா ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது.

விஷாலின் 31-வது திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த அறிவிப்பு இன்று ஒரு வீடியோவாக வெளியானது. விஷால் நடிக்கும் 31-வது திரைப்பத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மீண்டும் யுவன் – விஷால் கூட்டணி இணைந்துள்ளது இதை அறிந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இப்படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பாக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகை நடிகர் தேர்வுகள் நடைபெற்றது வருகிறது.

தற்போது விஷால் துப்பறிவாளன் 2 மற்றும் ஆர்யாவுன் இணைந்து எனிமி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களும் இந்த வரும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version