News
வீரமாதேவி ஆகிறார் சன்னி லியோன்

கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சன்னி லியோன் முதன் முறையாக வரலாற்று பின்னணி கொண்ட, தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த படத்தின் தலைப்பை சரியாக யூகித்து சொல்லும் ரசிகர்கள் பட பூஜை அன்று சன்னி லியோனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தியும் இணையதளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது. இதனை தொடர்ந்து Sunny Leone in South என்ற ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தலைப்பை யூகித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ‘வீரமாதேவி’ என்ற படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த பெயர் தென்னகத்தின் வரலாற்று பின்னணியை கொண்ட மிக முக்கியமான வீரமங்கையின் பெயர் ஆகும். வீரமாதேவி என்ற இந்த கதாபாத்திரத்தில் தான் சன்னி லியோன் நடிக்கிறார்.
மிக பிரமாண்டமான போர் காட்சிகள் படத்தில் இடம் பெறுவதால் அதற்காக பிரத்தியேகமாக போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சன்னி லியோன். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஸ்டீவ்ஸ் கார்னர் பட நிறுவனம் சார்பில் பொன்சே ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்தை வி.சி. வடிவுடையான் இயக்குகிறார். அம்ரேஷ் இசையமைக்க, இனியன் ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்துக்காக மிக பிரமாண்டமான அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது