Connect with us
 

News

வுண்டர்பார் நிறுவனம் மூடப்படுகிறதா?

Published

on


நடிகர் தனுஷின் தயாரிப்பி நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் பெரும் நஷ்டத்தால் மூடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக பல படங்களை தயாரித்து வந்தார் தனுஷ். மிக மிக குறைப்பட்ட காலங்களில் சுமார் 20 படங்களை இந்த நிறுவனம் தயாரித்து உள்ளது இதில் ரஜினி நடிப்பில் வெளியான காலா படமும் அடங்கும்.

தனுஷ் ஒரு வெற்றி நடிகர் அப்படி இருந்த போதும் இவரின் தயாரிப்பு நிறுவனம் அப்படி அமையவில்லை. தனுஷ் கடந்த சில வருடங்களாக தயாரித்த படங்கள் அனைத்தும் பெரும் நஷ்டத்தையே கொடுத்து வந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க நிறுவனத்தில் வேலை புரியும் தனுஷ் அவர்களின் நம்பிக்கை நிர்வாகிகளும் கணக்கு வழக்குகளில் கோல்மால் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு சில மாதங்களாக தனுஷ் மிக மன வேதனையில் உள்ளாராம்.

இதனால் இதுநாள் வரை கணக்கு வழக்கு பக்கமே வராத தனுஷ் இப்போது அதில் மிக ஆர்வமாக ஆராய்ந்து பார்த்த தனுசுக்கு பெரும் அதிர்ச்சி இதற்கு மேலும் இவ்வளவு நஷ்டத்தோடு இந்த நிறுவனம் தொடர வேண்டாம் இத இழுத்து மூடி விடலாம் என்று தனுஷ் கூறியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.