News
வெங்கட் பிரபுவுடன் இணையும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த புதிய படத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்கள் விரைவில் டுவிட்டரில் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அதனுடன் இருவரும் நிற்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதனால் இருவரும் இணைந்து பணியாற்ற போகிறது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த ஒரு தகவல் போதாதா இணையவாசிகளுக்கு வாய்க்கு வந்த கதையை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வெங்கட் பிரபு சொன்னது போல மங்காத்தா -2 படத்தை லாரன்ஸ் வைத்து இயக்க போகிறார் என்று ஒரு சில தரப்பினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இன்னொரு தரப்பினர் பில்லா 3 பாகம் இது சிம்புதான் இதில் நடிக்கவிருந்தார் ஆனால் தற்போது சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்கும் இடையில் உள்ள நட்பு உறவு சரியில்லை அதனால்தான் லாரன்ஸ் அவர்களை வைத்து இந்த பாகத்தை எடுக்க போகிறார் என்று ஒரு தரப்பு வதந்தியும் பரவி வருகிறது.
உண்மை என்னவென்றால் இது எதுவுமே உண்மை இல்லை வெங்கட் பிரபு – லாரன்ஸ் இருவரும் இணைவது புதிய படம் ஒன்று திரைப்படம் எந்த படத்தின் ரீமேக்கோ அல்லது அடுத்த பாகமோ இல்லை என்றும் இது ஒரு புதுவிதமான அதிரடி ஆக்ஷன் படம் என்றும் வெங்கட்பிரபு தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.