News

அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று – சிலம்பரசன் !

Published

on

இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தாய் இன்று மரணமானார் அதற்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர் அந்த வகையில் வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பரும் நடிகர் சிலம்பரசன் ஆறுதல் கூறியுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது.

அன்பு இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படு ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.

எதையும் சாதரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்வர்கள் நீங்கள். கடந்த இரண்டு வருடமாக இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும் இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக எளிமையாக எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்று நான் அறிவேன்.

அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு. அப்பாவிற்கும் குடும்பத்திற்கும் உங்களனைவருடனும் இழப்பையும் வேதனையும் பகிர்ந்துகொள்கிறேன்.

அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் கண்ணீதுடன் என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version