Connect with us
 

News

வெற்றிமாறன் – சூரி இணையும் படம் கைவிடப்பட்டதா?

Published

on

வெற்றி பட இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் படத்தை இயக்க இருந்தார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டு வந்தது ஆனால் திடீரென அந்த கதையை பின்னர் எடுக்கலாம் என்று சொல்லிவிட்டாராம் வெற்றிமாறன். அதற்க்கு பதிலாக வேறு ஒரு கதையை இயக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்துக்காக சூரி நீண்டகாலமாக எந்த படமும் ஒப்பந்தம் ஆகாமல் தாடி எல்லாம் வளர்ந்து வந்தார். இதனால் வெற்றிமாறனின் இந்த முடிவு மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புதிய படத்துக்காக சத்தியமங்கலம் காடுகளில் படப்பிடிப்பு நடத்துவதற்க்காக செட் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் படக்குழு.