Connect with us
 

News

வேட்டையாடு விளையாடு -2 பாகத்தில் கீர்த்தி சுரேஷ்?

Published

on

உலக நாயகன் கமல்ஹாசன்,ஜோதிகா நடிப்பில் கவுதம் மேனன் இயக்க்கத்தில் 2006-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் பணியில் இயக்குநர் கவுதம் மேனன் ஈடுபட்டு வருகிறார். இந்த முயற்சிக்கு கமல்ஹாசனும் சம்மதம் தெரிவித்த்திருக்கிறார். ஆனால் கதை நாயகியாக தன்னை முன்னிலைப்படுத்தி உருவாகும் படகங்களில் மட்டுமே நடித்து வரும் ஜோதிகா இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

இந்நிலையில் கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்க்கு கீர்த்தி சுரேஷை படக்குழு அணுகியதாகவும் அதற்க்கு கீர்த்தி சுரேசும் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று கூறப்படுகிறது. இது குறுத்தி அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.