Connect with us
 

News

ஸ்விட்சர்லந்தில் நடைபெற்று வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு !

Published

on

அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் வலிமை படத்தை தயாரிக்கிறார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் வலிமை படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது . அஜித் வில்லன்களை அடித்து நொறுக்கும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது என தகவல் கசிந்தது.

வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்விட்சர்லந்தில் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் ஆக்க்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர்.

ஸ்விட்சர்லந்தில் கார் மற்றும் பைக் ரேஸ் போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.ஸ்விட்சர்லந்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் சென்னை திரும்ப உள்ளனர் படக்குழு இந்தப் படத்திற்கு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் அல்லது நயன்தாரா நடிகள்ளாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வலிமை படத்திற்கு இசை அமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. வலிமை படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By : சரண்யா