News
இணையத்தை கலக்கும் ஹரிஷ் கல்யாண் – ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே !

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பெள்ளி சூப்ளு. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடிதால் படத்தின் நாயகி ரீத்து வர்மா நடித்திருந்தார். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுகொடுத்தது. உடனே அந்த படத்தின் தமில் ரீமேக் உரிமத்தை இயக்குநர் கெளதம் மேனன் வாங்கினார்.
தன்னுடைய தயாரிப்பில் நடிகர் விஷ்னு விஷால் மற்றும் தமன்னா நடிக்க இப்படத்திற்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் போஸ்டர்களை வெளியிட்டார் 2017-ஆம் ஆண்டு பின்னர் அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.
தற்போது அதே படத்தைதான் ஹரிஷ் கல்யான் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோரின் நடிப்பில் ஈஸ்வரன் படத்தை தயாரித்த நிறுவனமான மாதவ் மீடியா தயாரிப்பில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் தற்போது திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.