Connect with us
 

News

ஹிந்தியில் ரீமேக் ஆகும் சூர்யாவின் “சூரரைப்போற்று”

Published

on

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மோகன்பாபு ,ஜாக்கி ஷராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“சூரரைப்போற்று” படத்தை 2 டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சீக்கிய என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுத்த இந்த படம் தமிழ் ,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. கன்னடத்தில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சூரரைப்போற்று படத்தின் பாடல் வெளியீட்டு விழா இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கும் வகையில் முதல்முறையாக விமானத்தில் நடைபெற்றது.

தற்போது “சூரரைப்போற்று” படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனித் மொங்கா , இந்த படத்தை தேசிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளாராம்.மேலும் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் சூர்யா ஹீரோவாக நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

By : Saranya